
இந்தியாவின் பிரபல தொழில் அதிபரும், உலக பெரும் பணக்காரருமான கவுதம் அதானி மீது அமெரிக்க நீதிமன்றத்தில் லஞ்சப்புகார் தொடர்பான வழக்கு விசாரணையில் உள்ளது. கவுதம் அதானி, ஆலை தொடங்குவதற்காக அரசு அதிகாரிகளுக்கு லஞ்சப்பணமாக பல ஆயிரம் கோடி கொடுத்ததாக குற்றச்சாட்டு ஒன்று எழுந்தது.
இந்த விவகாரம் கடந்த குளிர்கால கூட்டத்தில் கடுமையான விவாத பொருளாக மாறியது. எனினும் அதானி முறைகேடு விவகாரத்தில் இந்திய அரசு சார்பில் இதுவரை எந்த நடவடிக்கை
யும் எடுக்கப்படவில்லை. கவுதம் அதானி மீது ஊழல் செயல்பாடு சட்டத்தின் (FCPA) கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.